உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் பறிமுதல்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் பறிமுதல்

அச்சிறுபாக்கம்: மதுராந்தகம் அடுத்த தேவாதுார் பகுதியில், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில்களை, வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.மதுராந்தகம் அடுத்த தேவாதுார் பகுதியில், புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்படி, அப்பகுதிக்குச் சென்ற அச்சிறுபாக்கம்மதுவிலக்கு போலீசார், மதுராந்தகம் அடுத்த தேவாதுார் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்கிற வினோத் குமார், 30, என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.அங்கு, புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகவைத்திருந்த, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 அட்டை பெட்டிகளில் இருந்த 1,920 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.தேவாதுார் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்கிறவினோத்குமார், புதுச்சேரிமதுபாட்டில்கள் கடத்தி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வழக்கில்,போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றவர் என, அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி