உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுச்சேரி சாலை முதல் சுங்கச்சாவடி தென்பட்டினத்தில் அமைகிறது

புதுச்சேரி சாலை முதல் சுங்கச்சாவடி தென்பட்டினத்தில் அமைகிறது

மாமல்லபுரம்:சென்னை - புதுச்சேரி இடையே, சுங்கக் கட்டண கிழக்கு கடற்கரை சாலையாக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்து பராமரித்தது.இத்தடத்தின் மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதியை, மத்திய அரசு கடந்த 2018ல், தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்தது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இத்தடத்தை மாமல்லபுரம் - முகையூர்; முகையூர் - மரக்காணம்; மரக்காணம் - புதுச்சேரி என, மூன்று பிரிவுகளாக பிரித்து, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தி வருகிறது.மாமல்லபுரம் - முகையூர் இடையிலான 30 கி.மீ., தொலைவுக்கான சாலைப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.முகையூர் வரையிலான முதல் பிரிவின் சுங்கச்சாவடி, கூவத்துார் அடுத்த தென்பட்டினம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிற்பதற்கான கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.அலுவலகம், ஊழியர்கள் ஓய்வறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டண வசூல் மையங்கள், மேற்கூரை உள்ளிட்டவை அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ