மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே ஆரவல்லிநகர் பகுதியில், சூணாம்பேடு - திண்டிவனம் செல்லும் சாலை உள்ளது. ஆரவல்லிநகரில் இருந்து புதுப்பட்டு இடையே உள்ள 2 கி.மீ., தார்ச்சாலையை புதுப்பட்டு, அசப்பூர், புதுக்குடி, ஆலத்துார் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இச்சாலை வழியாக தினமும் செல்லும் பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர்.கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம், உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்த அமுதா, 40, என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை பள்ளத்தில் இறங்கி ஏறியபோது தவறி விழுந்ததால், எதிரே வந்த லாரியின் பின்பக்க சக்கரம் அமுதாவின் தலை மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago