உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிசைக்குள் புகுந்த மழை நீர் வடமாநில தொழிலாளர்கள் பாதிப்பு

குடிசைக்குள் புகுந்த மழை நீர் வடமாநில தொழிலாளர்கள் பாதிப்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி அபிராம் நகர் பகுதியில் உள்ள காலி மனையில், தனிநபர் ஒருவர் வீடு கட்டி வருகிறார். அதன் கட்டுமானப் பணிகளில், வட மாநிலத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள், கட்டுமானப் பணி நடக்கும் வீட்டின் அருகிலேயே, தற்காலிக குடிசை வீடு அமைத்து தங்கியுள்ளனர்.இந்நிலையில், கடந்த 6ம் தேதி இரவில் மழை பெய்ய துவங்கியது. மழை தொடர்ந்து, விட்டு விட்டு பெய்ததால், அப்பகுதி முழுதும் மழைநீர் தேங்கியது. அதுமட்டுமின்றி, தேங்கி வழிந்தோடிய மழைநீர், வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைக்குள்ளும் புகுந்தது.அப்போது, குடிசையில் நள்ளிரவில் துாங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், பதறியடித்து எழுந்து குடிசையை விட்டு வெளியே வந்தனர். மழை நீர் உள்ளே புகுந்ததால், அவர்கள் வைத்திருந்த அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் வீணாகின. செய்வதறியாது மழையில் திகைத்து நின்ற அவர்களை, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அவரது வீட்டில் தங்க வைத்தார். இப்பகுதியில் மழைநீர் சீராக செல்வதற்கு, வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் தேக்கம் அடைவதாக பகுதிவாசிகள் தெரிவித்தனர்.எனவே, இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை