மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
6 hour(s) ago
மகன் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
6 hour(s) ago
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்
6 hour(s) ago
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் -- தேவனுார் சாலை 1.200 கி.மீ., துாரம் நீளம் கொண்டது.இந்த சாலையை, ரெட்டிப்பாளையம், குருவன்மேடு, பாலுார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை, பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருந்தன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதிஅடைந்து வந்தனர்.எனவே, சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, 2022- - 23ம் ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1 கோடியே 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய சாலை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது.தற்போது பணிகள் முழுதும் நிறைவடைந்து, இந்த சாலை பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago