உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடற்கரை ஆக்கிரமிப்பு கட்டுமானம் அகற்றம்

கடற்கரை ஆக்கிரமிப்பு கட்டுமானம் அகற்றம்

சென்னை : உத்தண்டி, சீசோர் அவென்யூ கடற்கரையில், அத்துமீறி கட்டுமான பணி நடந்தது. கடல் அலையில் இருந்து, 10 அடி துாரத்தில், சுற்றி தடுப்புச்சுவர் சுவர் எழுப்பி, மணலில் குழி தோண்டி கான்கிரீட்டால் தரை பலப்படுத்தப்பட்டது. பகுதிவாசிகள் புகாரின்பேரில், பிப்., மாதம் மாநகராட்சி அதிகாரிகள் பணியை நிறுத்தினர். இந்நிலையில், மீண்டும் பணி துவங்கியது. இதனால், கடற்கரை பாதுகாப்பு கேள்விக்குறியானது.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற சென்றபோது, பட்டா இருப்பதாகவும், உரிய அனுமதியுடன் கட்டுவதாகவும், ஆக்கிரமிப்பாளர் கூறி உள்ளார்.அதிகாரிகள் விசாரணையில், எந்தவித அனுமதியும் இல்லாமல் அத்துமீறி கட்டுவது தெரிந்தது.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆவணங்களை வைத்து, கடற்கரை ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை ஆய்வு செய்தனர். கடற்கரை ஆக்கிரமிப்பு என்பதை உறுதி செய்த பின், அவற்றை ஆக்கிரமிப்பாளரே அகற்ற வேண்டும் என்றனர்.தொடர்ந்து, கடல் மணலில் கட்டிய கான்கிரீட் கட்டமைப்பு, கம்பி அகற்றப்பட்டது. தொடர்ந்து கட்டுமான பணி செய்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை