உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - காஞ்சி சாலையில் கால்வாயை துார்வார கோரிக்கை

செங்கை - காஞ்சி சாலையில் கால்வாயை துார்வார கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு காவலர் குடியிருப்பு மற்றும் மாவட்ட சிறை ஆகியவை உள்ளன.இப்பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.கால்வாயில் அதிகமாக குப்பை சேருவதால், துார்ந்து கழிவு நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து, குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது.மழைக்காலங்களில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், சாலையில் செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, மக்கள் நலன் கருதி, மழைக்காலம் துவங்குவதற்குள் கால்வாயை துார்வாரி முறையாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை