மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
9 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
9 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
9 hour(s) ago
சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், இந்தலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.அதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம், சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது.கட்டடத்தின் கூரை சேதமடைந்து, அடிக்கடி ஓடுகள் கீழே விழுவதாக கூறப்படுகிறது. சுவர்கள் பலமிழந்து உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.பள்ளி திறப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில், விபத்து ஏற்படும் நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago