உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருத்தேரி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரிக்கை

திருத்தேரி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.சாலையின் இருபுறமும், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பகுதியில், நெடுஞ்சாலையில் போதிய அளவு வெளிச்சம் இல்லாததால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:திருத்தேரி, பாரேரி பகுதிகளில், ஆயிரக்கணக்கானோர் தங்கி, ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள், பேருந்துக்காக சாலையை கடந்து செல்லும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால், தனியே இரவு நேரங்களில் நடந்து செல்வோர், அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, இந்த பகுதியில் ஜி.எஸ்.டி., சாலை அருகில், உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும், போக்குவரத்து சிக்னல் அமைக்கவும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ