பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமிக்கு காப்பு
செய்யூர்: செய்யூரில் இருந்து சென்னை நோக்கி, தடம் எண்: 81இ என்ற அரசு பேருந்து, நேற்று 20 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. அம்மனுார் கிராமம் அருகே சென்ற போது, பேருந்தை வழிமறித்த போதை ஆசாமி, பேருந்தின் உள்ளே சென்று ஓட்டுனர் மற்றும் பயணியரிடம் தகராறில் ஈடுபட்டார். பின், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தார்.இதுகுறித்து செய்யூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில், அம்மனுார் கிராமத்தைச் சேர்ந்த கவுதம், 29, என தெரியவந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.