உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் நிற்கும் ஆம்னி பஸ் மாமல்லையில் விபத்து அபாயம்

சாலையோரம் நிற்கும் ஆம்னி பஸ் மாமல்லையில் விபத்து அபாயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், இரண்டு வாரங்களாக, தனியார் பேருந்து பழுதடைந்து நிற்பதால், இருசக்கர வாகன பயணியர் விபத்து அபாயத்துடன் கடக்கின்றனர்.இரண்டு வாரங்களுக்கு முன், சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, மாமல்லபுரம், பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பழுதடைந்தது.அதை சாலை யோரம் நிறுத்திபழுதுபார்க்க முயன்ற டிரைவர், முடியாததால் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றார். ஆனால், அதன்பின் பேருந்து அகற்றப் படாமல், தொடர்ந்து இரு வாரங்களாக அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் செல்வோர், பேருந்து நிற்குமிடத்தில் கடக்கும்போது, வேகமாக செல்லும் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியவில்லை.சில நேரங்களில், பேருந்தில் உரசி விபத்து ஏற்படும் அபாயத்துடன் கடக்கின்றனர்.விபத்து ஏற்படும் முன், பேருந்தை இடையூறின்றிவேறிடத்திற்கு மாற்ற, போக்குவரத்துபோலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ