உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விழிப்புணர்வு பஸ் மாமல்லைக்கு வருகை

சாலை விழிப்புணர்வு பஸ் மாமல்லைக்கு வருகை

மாமல்லபுரம்:அரசு போக்குவரத்துக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டலம், சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து, நேற்று மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் முகாமிட்டது.இந்த பேருந்தில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதை தவிர்த்து, மிதமான வேகத்தில் ஓட்டுவது, சாலை அடையாள குறியீடுகளை பின்பற்றி செல்வது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.மேலும், வாகனம் ஓட்டும்போது, மொபைல்போனில் பேசுவதை தவிர்ப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் இடம் பெற்றிருந்தன. இதை தொடர்ந்து, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி