சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி வேன் கிளீனர் கைது
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 4ம் தேதி சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை அறிந்த பெற்றோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியிடம் யாரோ பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து சிறுமி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.விசாரணையில், சிறுமி படித்து வந்த பள்ளி வாகனத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்த பாலுார் பகுதியை சேர்ந்த முருகன், 45 என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, முருகனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.