உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பு

கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பு

மாடம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், மாடம்பாக்கம் மேற்கு மாடவீதி, இரண்டாவது சந்து வழியாக மழைநீர் கால்வாய் செல்கிறது.அருகேயுள்ள தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தை, இக்கால்வாய் இணைப்பதால், மழைக்காலத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், இதன் வழியாக கோவில் குளத்திற்கு செல்லும்.மழைநீர் மட்டுமே சென்றுக் கொண்டிருந்த இக்கால்வாயில், சமீபகாலமாக கழிவுநீர் ஓடுகிறது.தனுஷா நகர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இக்கால்வாயில் கலந்து, மேற்கு மாடவீதியை கடந்து காலி மனையில் தேங்குகிறது. இதனால், கொசு தொல்லை அதிகரித்து, பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.திடீரென மழை பெய்தால், காலி மனையில் தேங்கியுள்ள கழிவுநீர், கோவில் குளத்திற்கு சென்றுவிடும்.குளத்திற்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் கலப்பதையும், மக்கள் பாதிக்கப்படுவதையும், மாநகராட்சி தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை