உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் தேங்கும் கழிவுநீர் வடகால் கிராமத்தில் துர்நாற்றம்

சாலையோரம் தேங்கும் கழிவுநீர் வடகால் கிராமத்தில் துர்நாற்றம்

மறைமலைநகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி வடகால் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையாக வழி இல்லாததால், அரசு பள்ளி அருகில் உள்ள பள்ளத்தில் தேங்குகிறது.தற்போது, அந்த பள்ளம் முழுதும் நிரம்பி, தெருக்களில் கழிவுநீர் வழிந்து செல்கின்றது. இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் குளியலறை, பாத்திரம் கழுவும் நீர் போன்றவை வெளியேற முறையாக வழி இல்லாததால், இந்த பகுதியில் தண்ணீர் தேங்குகிறது.இதன் காரணமாக, துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், மழை நீருடன் கழிவுநீர் கலந்து, சாலையில் செல்கிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்காமல் முறையாக வெளியேற, இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி