உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலியல் குற்றச்சாட்டு போலீஸ்காரர் டிஸ்மிஸ்

பாலியல் குற்றச்சாட்டு போலீஸ்காரர் டிஸ்மிஸ்

சென்னை, சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 42. இவர், எம்.கே.பி., நகர் காவல் நிலையத்தில், முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.கடந்த 2022ல், சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினரால், 'போக்சோ' சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பின், இளங்கோவன் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி