உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் காலணி பாதுகாப்பு மேடை அமைப்பு

ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் காலணி பாதுகாப்பு மேடை அமைப்பு

திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக உள்ள வடக்கு குளக்கரை, கிழக்கு குளக்கரை, சன்னிதி தெருக்களில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, அனுமதியின்றி தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக, வடக்கு, கிழக்கு குளக்கரை இணையும் இடத்தில், கோவிலுக்கு செல்லும் பிரதான நுழைவாயில் உள்ளது. இங்கு இருந்த தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளால், பக்தர்களுக்கு அதிக இடையூறு ஏற்பட்டது.மேலும், கோவிலுக்கு உள்ளே நுழையும் பக்தர்கள், அங்கு தான் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே செல்வர்.இதனால், அங்கு காலணிகள் குவிந்து கிடக்கும். அதை பக்தர்கள் மிதித்துக்கொண்டும், வயதானவர்கள் அதில் தடுக்கி தடுமாறியும் சென்று வந்தனர். ஒருபுறம் அதுவும் இடையூறாக இருந்தது.சில நாட்களுக்கு முன், கோவில் நிர்வாகம் சார்பில், மேற்கண்ட இடங்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால், அந்த இடங்கள் தற்போது விசாலமாக உள்ளன.அங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்கவும், பக்தர்கள் தங்கள் காலணிகளை முறையாக அடுக்கி வைக்க வசதியாகவும், மேடை அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, வடக்கு, கிழக்கு குளக்கரை இணையும் இடத்தில், பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் மேடை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை