உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கத்தியை காட்டி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கத்தியை காட்டி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையைச் சேர்ந்தவர் வீரராகவன் மனைவி சொர்ணலதா, 76. நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டினார்.பின், அவரது கழுத்தில் இருந்த தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்கள் என, 6 சவரன் நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி