கடமலைப்புத்துாரில் வேகத்தடை அமைப்பு
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் ஊராட்சி உள்ளது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஒரத்தி வழியாக வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.இது இருசக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் என, வாகன பயன்பாடு நிறைந்த சாலை. அதில், கடமலைப்புத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ளது.பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ, மாணவியர் சாலையை கடந்து சென்று வந்தனர்.அதனால், சில நேரங்களில் வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.எனவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.தற்போது, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலைத் துறையினர், கடமலைப்புத்துார் பள்ளி பகுதியில் வேகத்தடை மற்றும் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளதால், பகுதிவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.