உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் விவசாயிகளுக்கு விதை நெல் வினியோகம் துவக்கம்

அச்சிறுபாக்கம் விவசாயிகளுக்கு விதை நெல் வினியோகம் துவக்கம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள், சான்று பெற்ற நெல் விதைகளை வாங்கி பயன்பெற, வேளாண்மை விரிவாக்க மையம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது:அச்சிறுபாக்கம் வேளாண்மை விரிவாக்கம்மையத்தில், நடப்பு பருவத்திற்கான நெல் ரகங்களான கோ51, கோ54, ஏடிடி37 ஆகிய நெல் ரகங்கள், போது மான அளவில் இருப்பு உள்ளன. மேலும், ஆடி பட்டத்திற்கு ஏற்ற சான்று பெற்ற உளுந்து, மணிலா, எள் விதைகளும் உள்ளன. அவற்றைப் பெற, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்ல, மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகமான 'சீவன் சம்பா' விதைகளும் உள்ளன.மேலும், மண் வளத்தை அதிகரித்து, மண்ணுயிர்களைப் பெருக்க, பசுந்தால் உற விதைகள் வாங்கி பயனடையுமாறு, கேட்டுக் கொண்டுப்படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை