உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில குத்துச்சண்டை போட்டி; 27ல் சென்னையில் துவக்கம்

மாநில குத்துச்சண்டை போட்டி; 27ல் சென்னையில் துவக்கம்

சென்னை : மாநில ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநிலகுத்துச்சண்டை சங்கம்மற்றும் சென்னை அமெச்சூர் குத்துச் சண்டை சங்கம் இணைந்து, மாநில ஓபன் குத்துச்சண்டை போட்டியை, சென்னை யில் வரும் 27 முதல் 30ம் தேதி வரை நடத்துகின்றன. போட்டிகள் சேத்துப்பட்டு, நேரு பூங்காவில்அமைந்துள்ள எஸ்.டி.ஏ.டி., அரங்கில் நடக்கின்றன.இதில், 'சப் - ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர்' பிரிவினருக்கு போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், இம்மாதம் 26ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.பங்கேற்க விரும்புவோர், 98846 75848, 79049 16116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சங்கத்தின் பொதுச்செயலர் பிரதீவ்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை