உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அணுசக்தி தொழிற்பகுதியிலும் விவசாயத்தில் தீவிர ஆர்வம்

அணுசக்தி தொழிற்பகுதியிலும் விவசாயத்தில் தீவிர ஆர்வம்

சதுரங்கப்பட்டினம், : கல்பாக்கம் பகுதியில், அணுசக்தி தொழில் வளாகம், குடியிருப்பு நகரிய பகுதிகள் உள்ளன.சுற்றுப்புறத்தில், கடம்பாடி, மணமை, குன்னத்துார், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெய்க்குப்பி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இப்பகுதிகளில், நெல், நிலக்கடலை, தர்பூசணி உள்ளிட்ட பயிர்கள் நன்றாக விளைந்தன. நெல் சாகுபடியும் நீண்டகாலத்திற்குமுன் செழித்திருந்தது.அணுசக்தி தொழில் வளாகம் ஏற்பட்டு, இப்பகுதி முழுதும் மேம்பட்டதால், நாளடைவில் விவசாய நிலப்பகுதிகள்அனைத்தும், வீட்டுமனையாக மாற்றமடைந்துவருகின்றன.விவசாயத்தில் கிடைக்கும் வருவாய் குறைவு, பாசன நீர் பற்றாக்குறை, பிற தொழில்கள், வேலைகளில் ஈடுபாடு உள்ளிட்ட காரணங்களால், விவசாயம்படிப்படியாகக் குறைந்தது.இத்தகைய சூழலிலும், அணுசக்தி தொழில் வளாகம் அருகில் உள்ள பகுதிகளில், பாரம்பரிய விவசாயம் கருதி, அத்தொழிலை கைவிடாமல், தற்போதும் விவசாயத்தில் ஆர்வம் தீவிர காட்டுகின்றனர். ஏரி, குளம், கிணறு ஆகியநீராதாரங்களை பயன் படுத்தி, தற்போது நெல்பயிரிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்