உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொடர் மின் தடையால் ஊரப்பாக்கத்தில் அவதி

தொடர் மின் தடையால் ஊரப்பாக்கத்தில் அவதி

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், ராஜீவ் காந்தி நகர், காரணைப்புதுச்சேரி பிரதான சாலை, பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, தொடர் மின்தடை ஏற்படுகிறது.இதனால், இப்பகுதிவாசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஊரப்பாக்கம் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக, அறிவிக்கப்படாத தொடர் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், கோடை காலத்தில் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம்.சீரான மின் வினியோகம் வழங்கக்கோரி, மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், மின்தடை தொடர்ந்து வருகிறது. எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை