உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அமைப்பு

தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அமைப்பு

மாமல்லபுரம்:இந்திய வானிலை ஆய்வுத்துறையின்கீழ், சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் 16 இடங்களில் தானியங்கி வானிலை நிலையத்தை அமைக்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாகம், கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பம், மார்க் சுவர்ணபூமி வளாகம், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, வி.ஐ.டி., கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், இந்நிலையங்களை தற்போது அமைத்துள்ளது.இதுகுறித்து, மண்டல வானிலை ஆய்வு மைய வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தில், 'சென்சார்' எனப்படும் தானியங்கி உணர்வி சாதனங்கள் உள்ளன. அவை, வெப்பநிலை, மழையளவு, காற்றின் ஈரப்பதம், வேகம், அழுத்தம், திசை உள்ளிட்ட தரவுகளை பதிவு செய்யும்.அதை டிஜிட்டல் முறைக்கு மாற்றி, வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடுவோம். அதன் வாயிலாக, தினசரி வானிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை