உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

சூணாம்பேடு : சூணாம்பேடு அடுத்த இல்லீடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 9. இவர் நேற்று, வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தபோது காலில் விஷப் பூச்சி கடித்துள்ளது.அதனால், சிறிது நேரத்திற்குப் பின், தமிழ்ச்செல்வனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே, தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை