உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிசை தீப்பற்றி எரிந்து நாசம்

குடிசை தீப்பற்றி எரிந்து நாசம்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தன், 55. கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் வீட்டில் உறங்கியுள்ளார். நள்ளிரவில், மின் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, குடிசையின் ஓலையில் தீப்பற்றி எரியத் துவங்கி, பின் வீடு முழுதும் தீ வேகமாக பரவியது.இதையறிந்த முத்தன், குடும்பத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து, செய்யூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை