உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காரில் பறந்த தி.மு.க., கொடி அகற்றம்

காரில் பறந்த தி.மு.க., கொடி அகற்றம்

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணியில், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ குழு என, 84 குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை பகுதியில், பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, தி.மு.க., கொடியுடன் கார் ஒன்று வந்தது. காரை மடக்கி சோதனை செய்தனர்.பின், தேர்தல் நடத்தை விதியை மீறி காரில் பறந்த தி.மு.க., கொடியை அகற்ற, பறக்கும் படை குழுவினர் உத்தரவிட்டனர். தொடர்ந்து, காரில் இருந்து தி.மு.க., கொடி அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை