உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

பவுஞ்சூர் : கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, இரணியசித்தி ஏரியில் இருந்து லாரிகள் வாயிலாக மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.நேற்று, இரணியசித்தி ஏரியில் இருந்து மண் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, பவுஞ்சூர் அடுத்த நெடுமரம் கிராமத்தில், முன்னே சென்ற வாகனத்தை முந்த முயற்சி செய்தது. அப்போது,எதிரே திடீரென வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, ப்ரேக் பிடித்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், லாரி ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சாலையோர தடுப்பில் மோதியதால், லாரியின் சக்கரங்கள்முழுதும் சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை