உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம் மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் - சதுரங்கப்பட்டினம் சாலையில், பல்வேறு வியாபார கடைகள், மீன் மார்க்கெட் ஆகியவை உள்ளன.வியாபாரிகள், கடைகளை சாலை வரை ஆக்கிரமித்து விரிவுபடுத்தியுள்ளனர். இதனால், சாலை மிகவும் குறுகியுள்ளது.கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை, கடைகளுக்கு முன் நீண்டநேரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.செங்கல்பட்டு, கல்பாக்கம் செல்லும் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள், இவ்வழியில் கடக்கும் நிலையில், கடைகள் ஆக்கிரமிப்புகளால் இடையூறு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைப் பகுதியை மீட்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை