மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
1 hour(s) ago
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, செட்டிமேடு கிராமத்தில் உள்ள அழகு திருவாத்தம்மன் கோவிலின் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை மர்ம நபர்கள் திருடிசென்றுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிமேட்டில், கிராம தேவதையான அழகு திருவாத்தம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன், 44, என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாக பூசாரியாகஉள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு, மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 2 சவரன் திருமாங்கல்யத்தை, மர்ம நபர்கள்திருடிச் சென்றது தெரிந்தது.அதிர்ச்சியடைந்த அவர், மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு கைரேகை நிபுணர்கள், கோவில் வளாகத்தில் தடயங்களை ஆய்வு செய்தனர்.பின், வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago