உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் துர்நாற்றம்

திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் துர்நாற்றம்

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, கன்னியம்மன் கோவில் தெருவில், வணிக கடைகள், உணகவம், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.அதனால், உணவகம் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஓ.எம்.ஆர்., சாலையை கடந்து தெற்கு மாடவீதி வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் செல்கிறது.இந்த கால்வாயில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவது தொடர்கிறது. அதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அந்த வகையில், நேற்று கன்னியம்மன் கோவில் தெரு, ஓ.எம்.ஆர்., சாலை இணையும் இடத்தில், சிறிய இணைப்பு கழிவுநீர் தொட்டி நிரம்பி, சாலையில் கழிவுநீர் சென்றது.இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள் பரவும் நிலையும் உள்ளது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமத்துடன் சென்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அடைப்பை சரி செய்யாமல் விட்டதால், தொட்டி மூடியிலிருந்து கழிவு நீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது.இங்கு, ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் உட்பட குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. நேற்று காலையில், சாலையில் கொப்பளித்து ஆறாக கழிவுநீர் ஓடியது.அதனால், அப்பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசியது. மூக்கைப் பொத்திக்கொண்டு, அதை கடந்து தான் அனைவரும் சென்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ