உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார், 24.இவர், மீனாட்சிபுரம் பிரதான சாலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பின்புறம், தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வந்த மூன்று பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்.அவர்களை நிறுத்திய சதீஷ்குமார், சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மூவரும், கத்தியை காட்டி மிரட்டி, கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, கல்லாவில் இருந்த 1,250 ரூபாயை பறித்துச் சென்றனர்.இது குறித்து, சதீஷ்குமார் கிளாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற, ஊரப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 23, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ விஜய், 28, மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 24, ஆகிய மூவரையும், நேற்று போலீசார் கைது செய்து, தாம்பரம் நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ