மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
21 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
21 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், ஆத்துார் பழத்தோட்டம் பகுதியில், செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசார், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்திய போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.இதையடுத்து, போலீசார் அந்த நபரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா மறைந்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.அவரை கைது செய்து, காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில், அவர் செங்கல்பட்டு அடுத்த காவியந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த சரவணன், 26, என்பது தெரியவந்தது.அவர் அளித்த தகவலின்படி, நேற்று மதியம் புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 24. என்பவருக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்த, சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த சூர்யா, 30, என்ற பெண்ணை, போலீசார் புலிப்பாக்கத்தில் மடக்கி கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக, சரவணன், பாலகிருஷ்ணன், சூர்யா ஆகிய மூவரிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
03-Oct-2025