| ADDED : ஏப் 06, 2024 12:21 AM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில், அரசு அனுமதியுடன் மண் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் செம்மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவை, செங்கை புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் மற்றும் அவற்றைச்சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்த லாரிகள், அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியேசெல்கின்றன.இந்த லாரிகள், அளவுக்கு அதிகமாக அளவு மண் ஏற்றப்படுவதோடு, மேலே தார்ப்பாய் மூடாமல் உள்ளதால், செம்மண் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:இந்த நெடுஞ்சாலைகளில், அதிக அளவில் கல் குவாரியில் இருந்து கருங்கற்கள், எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகள் செல்கின்றன. அதேபோல, செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளும், அதிக அளவில் செல்கின்றன. தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள், திடீர் பிரேக் போடும் போது, லாரிகளில் இருந்து மண் வாகனஓட்டிகள் மீது விழுகிறது.எனவே, தார்ப்பாய் மூடாமல் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்லும் லாரிகள் மீது, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.