உள்ளூர் செய்திகள்

டூ - வீலர் திருட்டு

மதுராந்தகம்:மதுராந்தகம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு மகன் அருண்குமார், 29; உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார்.நேற்று வழக்கம்போல், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், கால்நடை மருத்துவமனைக்கு எதிரே உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை திறக்க, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.பின், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, உடற்பயிற்சிக் கூடத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, பல்சர் இருசக்கர வாகனம் மாயமானது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.இதுகுறித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை