உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிலாளியை வெட்டி நகை பறித்த இருவர் கைது

தொழிலாளியை வெட்டி நகை பறித்த இருவர் கைது

சென்னை : சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 33. இவரது நண்பர் தினேஷ், 34. இருவரும், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, 'பைக்'கில் வீடு திரும்பினர்.அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், அரிகிருஷ்ணனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், தினேஷை கத்தியால் வெட்டி விட்டு, இரண்டு சவரன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து விசாரித்த அமைந்தகரை போலீசார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த புருஷோத்தமன், 39, ஷெனாய் நகரைச் சேர்ந்த முருகன், 40, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி