உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பீரோவை உடைத்து நகை திருட்டு பவுஞ்சூரில் இருவருக்கு காப்பு

பீரோவை உடைத்து நகை திருட்டு பவுஞ்சூரில் இருவருக்கு காப்பு

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 50. விவசாயி.இவர், கடந்த 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு, வீட்டு கதவை பூட்டி, சாவியை ஜன்னலில் வைத்து விட்டு, மனைவி மல்லிகாவுடன் தங்களுக்கு சொந்தமான வயலுக்கு விவசாய வேலைக்காக சென்றார்.வேலை முடிந்து, இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. அதிச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்க்கையில், படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, அணைக்கட்டு காவல் நிலையத்தில், முருகேசன் புகார் அளித்தார். வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், சம்பவம் நடந்த அன்று, அப்பகுதியில் சந்தேகமான முறையில் நடமாடிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதில், வடக்கு வயலுார் கிராமத்தை சேர்ந்த நவீன், 35, சேவூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், 24, என்பது தெரிய வந்தது.விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:காயலாங்கடையில் போடுவதற்காக, பழைய இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சேகரிக்க, இருவரும் விழுதமங்கலம் பகுதியில் சுற்றி வந்துள்ளனர்.வீட்டின் ஜன்னலில் சாவி இருப்பதை கண்டு, சாவியை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து, அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை