உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்,:தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியமாக, 15,700 ரூபாய் வழங்கவேண்டும்; காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்; அரசாணையை திருத்தி, மீண்டும் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.ஓய்வுபெற்றவர்களின் சி.பி.எஸ்., இறுதித்தொகையை உடனே வழங்கவேண்டும்; வருவாய்த்துறை காலி பணியிடங்களில், தங்களை 25 சதவீத முன்னுரிமையில் நியமிக்க வேண்டும்; தங்களுக்கு மாற்றுப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ