உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய நபருக்கு வலை

ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய நபருக்கு வலை

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நீதிதேவி, 53. இவர், ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகில், ஹோட்டல் நடத்தி வருகிறார்.அந்த ஹோட்டலை, இதற்கு முன் வேறு ஒருவர் நடத்தி வந்ததாகவும், அவரால் தொடர்ந்து நடத்த முடியாமல் நீதிதேவியிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ஹோட்டலில் முன்பு வேலை செய்த பிரபு என்பவர், தனக்கு வேலை இல்லாமல் போனதால், தனது நண்பர்கள் நான்கு பேருடன், நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு வந்து, நீதி தேவிமற்றும் அவரது மகன்,மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது, அங்கு இருந்த இரும்பு இருக்கை மற்றும் கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.பின், இரும்பு இருக்கையால் அடித்ததில், நீதிதேவியின் மகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். தொடர்ந்து, ஐந்து பேரும் தப்பினர்.உடனடியாக,நீதிதேவி போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், மயக்க நிலையில் இருந்த நீதிதேவியின் மகனை மீட்டு,மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி