உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலூரில் சாலை படுமோசம் சீரமைக்க நடவடிக்கை எப்போது?

வண்டலூரில் சாலை படுமோசம் சீரமைக்க நடவடிக்கை எப்போது?

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதியில், ஏழு மற்றும் இரண்டாவது பிரதான சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன.இந்த இரு சாலைகளும், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:ஏழு மற்றும் இரண்டாவது பிரதான சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை.இதை தொடர்ந்து, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், தற்போது வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் ஆறாக ஓடுகிறது. ஏற்கனவே, சாலையும் சேதமான நிலையில், கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால், அப்பகுதி வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சாலையை சீரமைத்து, கழிவுநீர் வடிகால்வாய் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை