மேலும் செய்திகள்
தடுப்பின்றி தரைப்பாலம்
25-Aug-2024
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ஏரிக்கரை சாலையை, கிழக்கு பொத்தேரி, வல்லாஞ்சேரி, காமாட்சி அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் பொத்தேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.இந்த சாலையில், ஏரிக்கரை கலங்கல் பகுதியில், வாகனங்கள் செல்ல தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்பு சுவர் மற்றும் தடுப்பு கம்பிகள் போன்றவை இல்லாததால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Aug-2024