உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு- - பவுஞ்சூர் தடத்தில் பேருந்து சேவை துவக்கப்படுமா?

சூணாம்பேடு- - பவுஞ்சூர் தடத்தில் பேருந்து சேவை துவக்கப்படுமா?

செய்யூர்:செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சூணாம்பேடு, பவுஞ்சூர், வெடால், அம்மனுார், இரணியசித்தி உள்ளிட்ட ஊராட்சிகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.செய்யூர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கானோர் செய்யூர் பகுதிக்கு வருகின்றனர்.செய்யூர் வழியாக சூணாம்பேடு - பவுஞ்சூர் இடையே அரசு பேருந்து வசதி இல்லாததால், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்தாமூர் மற்றும் பவுஞ்சூர் ஒன்றியத்தில் வசிப்போர், ஷேர் ஆட்டோவை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் 'லிப்ட்' கேட்டு செல்லும் அவலநிலை தொடர்கிறது.செய்யூர் வழியாக சூணாம்பேடு - பவுஞ்சூர் இடையே அரசு பேருந்து வசதி துவக்கினால், சித்தாமூர், லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர், எளிதாக செய்யூர் பகுதிக்கு வந்து செல்ல முடியும்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இப்பகுதிவாசிகளின் நலன் கருதி, செய்யூர் வழியாக சூணாம்பேடு - பவுஞ்சூர் இடையே அரசு பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை