உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேலமையூரில் பாழடைந்துள்ள மினி டேங்க் சீரமைக்கப்படுமா?

மேலமையூரில் பாழடைந்துள்ள மினி டேங்க் சீரமைக்கப்படுமா?

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மேலமையூர் ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மூன்றாவது வார்டில் வசிப்போர் பயன்பாட்டிற்காக, ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் அமைக்கப்பட்டது.அதில் இருந்த மின் மோட்டார், சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. அது, மீண்டும் சீரமைக்கப்படாததால், மின் டேங்க் மற்றும் மின் மீட்டர் வைக்கப்பட்டு உள்ள இரும்பு பெட்டி சேதமடைந்து உள்ளது.மின் இணைப்பு உள்ள இந்த பெட்டியின் மூடி திறந்த நிலையில் உள்ளதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தெரு குழாய்களில் தண்ணீர் வராத நேரங்களில், நீண்ட துாரம் சென்று தண்ணீர்எடுத்து வரும் நிலைஉள்ளதாக, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.எனவே, இந்த மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து, மினி டேங்கை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ