உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செய்யூர் பள்ளியில் அமையுமா?

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செய்யூர் பள்ளியில் அமையுமா?

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அம்மனுார், புத்துார், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மாணவர்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 2013ல், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் இருந்து, குழாய்கள் வாயிலாக நேரடியாக வரும் தண்ணீரை, மாணவர்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பாசி படிந்து உள்ளதால், குடிநீரின் பாதுகாப்பு கோள்விக்குறியாகி உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி