உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் நாராயணபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அமையுமா?

நந்திவரம் நாராயணபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அமையுமா?

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நாராயணபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நந்திவரம் நாராயணபுரத்தில், 600க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மேல் உள்ளன. இங்கு, 25 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி, இதுவரை நகராட்சி சார்பில் செய்யப்படவில்லை.இப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டி, நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சாலையிலேயே வெளியேற்றுகின்றனர். இதனால், துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ