உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொறப்பாக்கம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

மொறப்பாக்கம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

அச்சிறுபாக்கம்:மதுராந்தகத்தில் இருந்து மொறப்பாக்கம், எல்.எண்டத்துார் வழியாக உத்திரமேரூர் பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், கழனிப்பாக்கம், கூடலுார் ஊராட்சி பகுதிக்கு செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.மேலும், இச்சாலையில் வாகன போக்குவரத்தும் நிறைந்து காணப்படும். இங்குள்ள சாலை வளைவு மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது.இதனால், கல்குவாரி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள், அரசு, தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால், எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை வளைவு பகுதிகளில் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சாலை வளைவு பகுதிகளில், வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி