மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
21 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
21 hour(s) ago
ராமாபுரம் : சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா, 20; பி.ஏ., பட்டதாரி. இவரும், ராமாபுரம் பாரதிசாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரும்காதலித்தனர்.மணிகண்டனுக்கு சிறுநீரகத்தில் கல்லடைப்பு ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் உடனிருந்து மணிகண்டனை ஸ்ரீஜா கவனத்துள்ளார்.அதன்பின், 29ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டில் ஸ்ரீஜா தங்கி வந்தார். இதையடுத்து,திண்டிவனத்தில் இருந்து மணிகண்டனின் தாய் ரேவதியும் வந்து, மகனுடன் தங்கியிருந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீஜாவும் மணிகண்டனும் வெளியே சென்று விட்டு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்பி உள்ளனர். காலை 5:00மணியளவில் ரேவதி ஸ்ரீஜா அறைக்குசென்றபோது,அவர் துப்பட்டாவால், மின் விசிறியில் துாக்கிட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின், தாயும் மகனும் சேர்ந்து ஸ்ரீஜாவின் உடலை மீட்டு, ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.தகவலறிந்த ராமாபுரம் போலீசார், உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், மணிகண்டன் தன் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து தலைமறைவானார்.ஸ்ரீஜா தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் ரேவதியிடம்விசாரிக்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago