உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநகர பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

மாநகர பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

மறைமலை நகர்:செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி, நேற்று காலை திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தடம் எண் எண்: 500 மாநகர பேருந்து சென்றது.பேருந்தை, உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த பிலிக்ஸ், 36, என்பவர் இயக்கினார். சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் மாநகர பேருந்து வந்த போது, பின்னால் வந்த 'டாடா மேஜிக்' வாகனம், மாநகர பேருந்து மீது மோதியது.அதனால், 'டாடா மேஜிக்' வாகன டிரைவரான, திண்டிவனம் பகுதியை சேர்ந்த செல்வம், 38, என்பவருக்கும், மாநகர பேருந்து டிரைவர் பிலிக்ஸ்க்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், செல்வம் பிலிக்ஸை தாக்கினார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.பேருந்தில் இருந்த பயணியர், அந்த வழியாக வந்த மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின், பிலிக்ஸ் அளித்த புகாரின்படி, செல்வத்தை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை