உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி

திருப்போரூர்:சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 27. இவர், மனைவி மற்றும் நண்பர்களுடன், கோவளம் புளூ பீச் கடற்கரைக்கு வந்தார்.அனைவரும் கடலில் குளித்தபோது, கார்த்திக் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீட்டனர்.மயங்கிய நிலையில் இருந்த கார்த்திக்கை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, கேளம்பாக்கம் போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ