உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில் மோதி இளைஞர் பலி

ரயில் மோதி இளைஞர் பலி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த மலை நகர் பகுதி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவர்தன், 36.இவர், நேற்று மாலை 6:00 மணிக்கு, விழுப்புரம்- - சென்னை மார்க்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, வயல்வெளிப் பகுதியில், மேய்ச்சலுக்கு கட்டியுள்ள மாடுகளை ஓட்டி வர சென்றுள்ளார்.அப்போது, திண்டிவனம் மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில், அரப்பேடு ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கோவர்தன் மீது மோதியது.இதில், கோவர்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு ரயில்வே போலீசார், கோவர்தனின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ